Categories
தலைவர்கள் தேசிய செய்திகள் பல்சுவை வரலாற்றில் இன்று

ஏவுகணை நாயகன் ” பிறந்தநாள் சுவாரசியங்கள்” தெரிஞ்சுக்கோங்க பிறருக்கு சொல்லுங்க …!!

பிறந்தநாளில் கலாமின் சுவாரசியம் பற்றி தெரிந்து கொள்வதில் நாம் அனைவருக்கும் பெருமையே 

இந்தியாவின் ஏவுகணை நாயகன் , இளைஞர்களின் எழுச்சி நாயகன் இப்படி பலரால் போற்றப்படுபவர் தான் அப்துல் கலாம். ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து விஞ்ஞானியாக வளர்ந்து பிறகு இந்தியாவின் முதல் குடிமகனாகவும் இருந்தவர் அப்துல்கலாம். இப்படி உலகம் அறிந்த உன்னத தலைவரான இவருடைய வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

ஏழ்மை குடும்பம் , செய்தி தாள் விநியோகித்த கலாம் : 

பிறப்பு :  15 அக்டோபர் 1931

இறப்பு : 27 ஜூலை 2015 

அப்துல்கலாம் அவர்கள் மிக , மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து , மிகவும் கஷ்டப்பட்டு படித்தது நம்ம எல்லாருக்குமே நல்லா தெரியும். அவர் சின்ன பையனா இருக்கும் போது காலை 4  மணிக்கெல்லாம் எழுந்து விடுவார். ஏன்னென்றால் ராமேஸ்வரம் கோவிலில் அப்போது காலை 4 மணியிலிருந்து 5 1/2 மணி வரைக்கும் இலவசமாக கணக்கு பாடம் சொல்லிக் கொடுப்பார்கள்.

அதனால் இவர் அங்கு போய் படிப்பார்.  பிறகு 5 1/2 மணியிலிருந்து 6 மணி வரைக்கும் மசூதி சென்று பின்னர் அவருடைய பெரியப்பா பையனும் சேர்ந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று அங்கு  ட்ரெயின்ல வர செய்தித்தாள்கள் கட்டை வாங்கி வந்து அதை வீடு வீடாக சென்று டெலிவரி பண்ணுவாங்களாம்.

ஏழ்மையில் விளக்கு கூட இல்லா நிலை :

காலை 6 மணியிலிருந்து 8 மணி வரை பேப்பர் போடுற தான் அவரோட தினசரி வேலை. அதன் பிறகு வீட்டுக்கு வந்து பழைய கஞ்சியை குடிச்சுட்டு ஸ்கூலுக்கு போவாராம் கலாம் . ஸ்கூல் போய்ட்டு வந்ததும் மாலை 4 மணியிலிருந்து ஆறு மணிவரை காலை எந்த வீட்டுக்கெல்லாம் பேப்பர் போட்டாரோ அந்த வீட்டுக்கெல்லாம் போய் காசு கலெக்ட் பண்ணுவாராம். அதன் பிறகுதான் படித்து விட்டு துவங்குவார்.

அப்போது பெரும்பாலான வீடுகளில் கெரோசின் விளக்குதான் இருக்கும். கலாம் குடும்பம் வறுமையான நிலையில் இருந்தது கூட கெரோசின் விளக்கை கொஞ்சம் அதிகமாக பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதனால் இரவு 8 மணிக்கு மேல அவங்க அம்மா கெரோசின் விளக்கை அனைத்து விடுவார்களாம்.

வறுமையில் கல்வி : 

அதன்பிறகு ஒருநாள் அப்துல் கலாம் பள்ளி ஆசிரியர் ஒருவர் வந்து அவங்க அம்மாகிட்ட பேசியதில் இருந்து கெரோசின் விளக்கு நைட்டு 11 மணி வரைக்கும் விளக்கை எரியவிட்டு இருக்காங்க. இப்படி மிக , மிக சிரமப்பட்டு தான் அப்துல் கலாம் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்து இருக்கிறார்.

அதன் பிறகு அவர் திருச்சி சென் ஜோசப் காலேஜ் படிக்க சென்றார். ஆனால் கலாம் கிட்டயும் , அவரது குடும்பத்தாரிடமும் சுத்தமா பணம் இல்லை. அந்த சமயத்துல அவரோட அக்கா தன்னுடைய கையில் போட்டிருந்த வளையலை வைத்து படிக்க பணம் அனுப்புனாங்க.

வறுமையால் 4 ரூபாய் மிச்சம்  செய்த கலாம் :

கல்லூரியில் கலாம் காலேஜ் ஹாஸ்டல்ல தான் தங்குவார். அவங்க சாப்பிடறதுக்கு ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று விசாரிக்க , அசைவ சாப்பாட்டுக்கு மாதம் 44 ரூபாய் , சைவ சாப்பாட்டுக்கு மாதம் 40 ரூபாய் அப்படின்னு சொல்ல.  முஸ்லிமாக இருந்தாலும்

வறுமையின் காரணமாக அசைவ உணவைப் புறந்தள்ளி  4 ரூபாயை மிச்சம் செய்வதற்காக சைவ உணவை சாப்பிட தொடங்கியனார் அப்துல் கலாம் . அதான் பின் அவர் இருக்குற வரைக்கும் அசைவத்தை சாப்பிடாமல் வெறும் சைவைத்தை மட்டுமே சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊருக்கு செல்ல பணம் இல்லை : 

கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும்போது திடீரென்று தனுஷ்கோடியை ஒரு பெரும் புயல் தாக்கியது. அதனால அவரோட வீடு , வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் புயலால்   சூறையாடப்பட்டது. உடனே அவங்க வீட்டுல இருக்குறவங்க அவரை ஊருக்கு புறப்பட்டு வர சொல்றாங்க. ஆனா ஊருக்குப் போக அவருக்கு சுத்தமா காசு இல்ல. அந்த சூழ்நிலையில் அவர் பரிசாக வாங்கிக் இருந்த ஒரு புத்தகத்தை கொண்டு போயி ஒரு கடையில விற்பனை செய்யுற நிலைமைக்கு கலாம் தலைப்பட்டார். அந்த புத்தகத்தைத்தின் அப்போதைய உண்மையான விலை 400. அந்த புத்தகத்தை திறந்து பார்த்த கடைக்காருக்கு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது.

செலவுக்காக புக்_கை விற்பனை செய்த கலாம் :

மிகப்பெரிய கல்வியாளர் ஒருவர் தன்னுடைய கையெழுத்தை போட்டு ”நீ ஒரு மிகச் சிறந்த மாணவன்” அப்படிங்கிற வரிகள் அந்த புத்தகத்தில் எழுதப்பட்டு இருந்தது . உடனே அந்த கடைக்காரர் கேட்கிறார். இது மிகச் சிறந்த புத்தகம் , இதை  நீ பரிசாக வாங்கி இருக்கிறார். ஏன்  விற்பனை செய்ய கொண்டு வந்துள்ளாய் என கேட்டதுக்கு அப்துல் கலாம் சொல்லி இருக்காரு , என்னுடைய ஊர் புயலால் பாதிக்கப்பட்டு விட்டது.

நான் ஊருக்கு செல்லவேண்டும் அதற்க்கு என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார்.  உடனே ஊருக்கு போக உனக்கு எவ்வளவு செலவாகும் என அந்த கடைக்காரர் கேட்க 60 ரூபா செலவாகும்னு அப்துல் கலாம் சொல்லியிருக்கிறார்.அந்த புத்தகத்தை வாங்கி கொண்ட கடைக்காரர் அவருக்கு பணம் கொடுத்து உதவியுள்ளார்.

இளைஞர்களுக்கு வர வேண்டும்…. இல்லையென்றால் ஜனாதிபதி பதவி வேண்டாம் : 

பிறகு சில காலங்களில் அந்த புத்தகத்தை அதே கடையில் இருந்து அப்துல் கலாம் 60 ரூபாய் கொடுத்து மீட்டும் இருக்காரு.அப்துல் கலாம் ஜனாதிபதியாக பதவி ஏற்கையில் உங்க சார்பா நீங்க ஒரு 150 பேரை அழைச்சிட்டு வரணும் அப்படின்னு சொல்றாங்க. உடனே அப்துல் கலாம் சொல்கிறார் என்னோட சார்பா 22 ஃபேமிலி மெம்பர் வருவாங்க , அதோட 100 இந்திய இளைஞர்கள் வருவாங்க என்றதும் உடனே பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் சொல்றாங்க நூறு

இளைஞர்களை இங்க அழைத்து வந்தால் அவர்களுக்கு முறையான புரோட்டாகால் கொடுக்க முடியாது , எனவே 100 பேரை அனுமதிக்க முடியாது. அதனால உங்க சொந்தக்காரங்க உள்ள மட்டும் வர சொல்லுங்க அப்படின்னு சொல்லி இருக்கிங்க. உடனே அப்துல் கலாம் சொல்லியிருக்காரு இளைஞர்களுக்கு அனுமதி இல்லை என்றால் நான் ஜனாதிபதி பதவியை ஏற்க மாட்டேன்  என்று திட்டவட்டமாக சொல்லி இருக்காரு.

பணியாளரை டிஸ்மிஸ் செய்த கலாம்…. எதற்காக ?

இளைஞர்கள் மீது முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிற ஒருத்தறால் மட்டும்தான் அவர்களுக்காக எதையும் செய்ய முடியும் அதற்கு சிறந்த உதாரணம் தான் அப்துல் கலாம் ஐயா அவர்கள். அவர்  ஜனாதிபதி ஆன பிறகு ராஷ்டிரபதி பவனுக்கு போகும்போது இரண்டே இரண்டு பெட்டி மட்டும் தான் கொண்டு போனாரு. அப்போது அவருடைய ஷூவை கழட்டி விடுவதற்காக அங்க வேலை செய்ய ஒருத்தரு வேக வேகமா வந்து அவருடைய ஷூ_வை கழத்தி உள்ளார்.

உடனே அப்துல் கலாம்  எதற்காக நீ  என்னுடைய ஷூ_வை கழத்துக்குகின்றாய்  என்று கேட்டதுக்கு உடனே அந்த பணியாளர் சொல்றாரு இது தான் என் வேலை , இதுக்காகத்தான் நான் சம்பளம் வாங்குறேன். ஷூ_வை கழத்துவது , அதற்க்கு பாலிஸ் போடுவது வரைக்கும் என்னோட வேலைதான் அப்படின்னு சொல்லி இருக்காரு. உடனே அப்துல் கலாம் அவர்களை பார்த்து யூ ஆர் டிஸ்மிஸ்டு என்று சொல்லியுள்ளார்.

பணியாளரை மதித்த கலாம் : 

உடனே அந்தப் பணியாளர் சொல்லி இருக்காரு ஐயா நீங்க இப்ப தான் ஜனாதிபதி ஆகி இருக்கீங்க  அவனுக்குள்ள வந்து என்ன வேலைய விட்டு தூக்கிட்டிங்க , நான் இங்க பல காலமாய் இருக்கேன் நீங்க வந்ததும் மொத வேலையா என்னோட வேலையை தான் காலி பண்ணனும்னு இருக்கா ? அப்படின்னு சொல்லி இருக்காரு. உடனே அப்துல் கலாம் சிரிச்சு கிட்டே சொல்லி இருக்காரு இனிமேல் நீ என்னுடைய ஷூவை கழட்டி மாட்ட வேண்டாம்.

அதெல்லாம் நானே செய்கிறேன் , இ ங்கு இருக்கிற செடிகளுக்கு தண்ணி ஊத்து , அதுதான் ஒன்னோட வேலை அப்படின்னு சொல்லி இருக்காரு. அப்துல் கலாம் ஜனாதிபதி ஆனபோது ஜார்ஜ் புஷ் இந்திய  ஜனாதிபதி மாளிகைக்கு வரும்போது அங்கே இருந்த கார்பெட்டுகளை  எல்லாம் பார்த்து இது எல்லாம் ரொம்ப பழசா இருக்கு இதையெல்லாம் உடனே மாத்திடுங்க அப்படின்னு சொல்லி இருக்காரு.

ஐஸ்வர்யாராய்_க்கு உலக அழகி பட்டம் எதற்காக ? அப்துல்கலாம் கேள்வி : 

அதற்க்கு அப்துல் கலாம் சொல்லி இருக்காரு மன்னிக்கணும் அது எல்லாம் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. உங்களை பொருத்தவரை அது வெறும் கார்பெட் , ஆனால் என்னை பொறுத்தவரை இந்த நாட்டுக்காக பெருமை சேர்த்த மிகப் பெரிய மகான்கள் காலடித்தடம் பட்ட கார்பெட் அப்படின்னு சொல்லி இருக்காரு. அடுத்ததா ஒரு சமயம் அப்துல் கலாம் ஒரு சின்ன ஸ்கூலுக்கு போறாரு , அங்கே இருந்த பெண் பிள்ளைகள் கிட்ட ஐஸ்வர்யாராய்_க்கு உலக அழகி பட்டம் கொடுத்ததற்கு என்ன காரணம் என்று கேட்கிறார். ஒரு மாணவி சொல்றாங்க ஐயா  அவுங்க அழகா இருந்தாங்கனு சொல்லுறாங்க.

அடுத்த மனைவி சொல்றாங்க ஐயா அங்கு இருந்தவர்களில்அவங்க தான் அறிவாளி என்று சொல்றாங்க. அடுத்து ஒரு மாணவிசொல்றாங்க ஐயா நான் அந்தப் போட்டியில் நான் கலந்துகொள்ள அதனாலதான் அவங்க தேர்வு பண்ணிட்டாங்க அப்படின்னு சொல்லி இருக்காங்க. அதை கேட்டு அப்துல் கலாம் சொல்லி இருக்காரு ஐ தின்க் திஸ் இஸ் தே கரெக்ட் ஆன்சர் பெண்களுக்கு இந்த மாதிரி எப்பவுமே அதிகப்படியான தன்னம்பிக்கை இருக்கணும் அது தான் இந்த நாட்டுக்கும் , நாட்டு மக்களுக்கும் , வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்று சொல்லி இருக்காரு.

உங்களோட பெரிய சாதனை என்ன ? கலாமிடம் கேள்வி :

இந்தியாவில் இருந்த மிகச் சிறந்த அறிவியல் அறிஞ்சராகவும் ,  ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் கிட்ட அவருடைய பதவி காலம் முடிந்த பிறகு பத்திரிகையாளர்கள் ஒருவர் கேள்வி கேட்கிறார்கள். அதில் நீங்க செஞ்ச மிகப்பெரிய சாதனையாக எதை நினைக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். உடனே அப்துல் கலாம் சொல்கிறார் நான் ஒரு ஸ்கூல்ல பேசி முடிச்ச பிறகு நேஷனல் அந்தம் போட்டாங்க. அப்போ அங்கு இருந்த கடைசி வரிசையில் இந்த குழந்தைகளால் சரியாக எந்திரிச்சு நிற்கும் முடியல. நேஷனல் அந்தம் முடிஞ்ச பிறகு நான்  அவுங்கட்ட  போயி பார்த்தேன்.

இதான் என்னுடைய சாதனை ! கலாமின் அசத்தல் பதில் :

அப்போது அவர்களுக்கு செயற்கைகால் பொருத்தப்பட்டு இருந்தது.அவங்க கிட்ட விசாரிச்சதுல அவங்களால சரியா நடக்க முடியாதுனு சொன்னாங்க. அதற்கு காரணம் அவங்களுக்கு பொருத்தப்பட்டிருந்த சேர்க்கை கால். அதன்  எடை 4 கிலோவுக்கு மேல் இருந்தது. பின்னர் நான் அங்கிருந்த என்னுடைய ஆய்வுக்கு வந்த செயற்கை கால்கள் பற்றி தீவிரமாக சிந்திக்க தொடங்கினோன். ராக்கெட் செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு பொருளை வைத்து வெறும் 400 கிராம் எடையில் அந்த குழந்தைகளுக்கு செயற்கை கால் பொருத்தினேன். அதை தான் நான் மிகப் பெரிய சாதனை என்று நினைக்கிறேன்.

இந்தியாவின் எதிரி யார் ? கலாமின் கேள்வி :

ஒரு சமயம் ஒரு சின்ன கிராமத்தில் உள்ள பள்ளியில் அப்துல் கலாம் போயிருக்காரு அப்போது அங்கிருந்த மாணவர்கள் இந்தியாவினுடைய எதிரி யார் நீங்க நினைக்கிறீங்க அப்படின்னு கேட்டு இருக்காங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமா பதிலை சொல்லி இருக்காங்க.

ஆனால் சினேகா என்ற மாணவி வறுமையையும் , வேலையில்லாத் திண்டாட்டம் தான் இந்தியாவின் மிகப்பெரிய எதிரி அப்படின்னு சொல்லி இருக்கு. அத கேட்டு கண் கலங்கியனார் கலாம்.அவர் எழுதிய புத்தகத்தில் அவர் எழுதின இக்னைட்டடு மைன்ஸ் இந்த புக்ல இந்த பூப்கிஸ் டெடிகேடட் சினேகா அப்படின்னு குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக குடுபத்திற்கு அரசு பணத்தை பயன்படுத்ததாக கலாம் :

அடுத்ததா ஒரு சமயம் தன் சொந்த காரங்க எல்லாம் ஜனாதிபதி மாளிகைக்கு வந்து ,  அவங்க ஊரை சுற்றி பார்க்க எல்லா ஏற்பாடுகளையும் செய்து அவர்களுக்கான சாப்பாடும் ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்டது. ஒரு நாலு நாள் இருந்த எல்லாம் ஊருக்கு கிளம்பிட்டாங்க. அதன் பிறகு அவுங்களோட மொத்த செலவு வரைக்கும் எல்லாத்தையும் கணக்குப் பார்த்து தன்னுடைய சொந்த காசை கவர்மெண்ட்க்கு  கொடுத்துள்ளார் கலாம். தன்னுடைய நெருங்கிய சொந்தங்களை இருந்தா கூட அரசு பணத்தில் சாப்பிடக்கூடாது என்ற எண்ணம் கொண்ட ஒரு உன்னத மனிதர் கலாம் இப்படிப்பட்ட ஒரு தலைவரை இனி இந்தியா பார்க்கும் அப்படிங்கிறது சந்தேகம்தான்.

விஞ்ஞானியின் மகனுடன் கலாம்…. கண்கலங்கி நின்ற விஞ்ஞானி : 

அப்துல் கலாம் விஞ்ஞானியாக இருந்த காலத்தில் அவருக்கு கீழே வேலை செய்த ஒரு விஞ்ஞானி ஒரு நாள் அவர் கிட்ட இன்னைக்கு நான் ஆறு மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பனும் , அதுக்கு எனக்கு பெர்மிஷன் வேணும் அப்படின்னு கேட்டிருக்காரு. எதுக்காக ஆறு மணிக்கெல்லாம் கிளம்ப பர்மிஷன் கேட்க அப்படின்னு அப்துல் கலாம் கேட்டுள்ளார்.  உடனே அந்த விஞ்ஞானி , என்னுடைய பையனை சயின்ஸ் கண்காட்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் அப்படினு சொல்லி இருக்காரு.

பிறகு மாலை 6 மணியை கடந்தும் அந்த விஞ்ஞான மிகக் கடுமையாக வேலை செஞ்சுகிட்டு இருந்தாரு. அவரு வீட்டுக்கு போக 6 மணியை தாண்டிய உடனே அவசரமாக கிளம்பி , தன்னுடைய மகனுக்கு என்ன சொல்லப் போறோம்  என்ற அச்சத்தோடு வீட்டுக்குள் நுழைந்து இருக்காரு. ஆனா அவர்  பையன் இல்ல , உடனே அவர் பையன் எங்கே அப்படின்னு தன்னுடைய மனைவி கிட்ட கேட்டு இருக்கார். உடனே அவங்க சொல்லி இருக்காங்க , நீங்க சொன்னதா சொல்லித்தான் கலாம் வந்து அவனை சயின்ஸ் எக்ஸிபிஷன் கூட்டு போனார் அப்படின்னு சொல்லி இருக்காங்க. அதைக் கேட்ட அந்த விஞ்ஞானி கண் கலங்கி உள்ளார்.

அவரை உக்கார சொல்லுக ….. கலாமின் நல்ல குணம் :

ஒரு மனிதன் சிறந்த தலைவனுக்கு ஒரு மிகச்சிறந்த உதாரணமாக வாழ்ந்தவர் அப்துல் கலாம் .  அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஒரு இடத்துக்கு போகும் போது   முன்னாடி ஜிப்ஸி போயுள்ளது. மேலும் பின்னால் பாதுகாப்புக்காக சில வாகனத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் துப்பாக்கி வைத்துக் கொண்டு நின்று கொண்டே வந்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமா ஒரு நின்னுட்டு வந்ததா பார்த்த  அப்துல்கலாம் சொல்லி இருக்காரு. எதுக்கு அங்க நின்னுகிட்டு வராங்க முதல அவரை  உட்கார சொல்லுங்க அப்படின்னு சொல்லி இருக்காரு. அப்போது ஒரு ஜனாதிபதிக்கு முறையான செக்யூரிட்டி இருக்கணும். அப்படிங்கிறதற்காக அந்த வீரர் கடைசி வரைக்கும் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நின்னுக்கிட்டே வந்துள்ளார்.

பணியாளரிடம் Sorry கேட்ட குடியரசுத்தலைவர் :

பயணத்திற்கு பிறகு அவங்க போக வேண்டிய இடம் வந்ததும் காரை விட்டு இறங்கிய கலாம் அவரை வந்து என்னை பார்க்கச் சொல்லுங்க அப்படின்னு சொல்லிட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டார்.  அப்போது அந்த அதிகாரி அந்த அறைக்கு சென்றது கலாம் அவர் கையை பிடித்து ஐ எம் சாரி என்னால தான் நீங்க இவ்வளவு நேரம் ஓடுறஜீப்பில் நிறுத்தி வந்தீங்க , அப்படின்னு சொல்லியுள்ளார். ஒரு ஜனாதிபதி இப்பிடி பேசுவதை கேட்டு அந்த சோல்ஜர்ஸ் வாயடைச்சு போயிட்டாரு. இந்த மாதிரியான ஒரு குழந்தை மனசெல்லாம் அய்யா அப்துல்கலாமை தவிர வேற யாருக்கு வராது.

இலக்கு முக்கியம் அப்பா , அம்மா  மரணம் அல்ல :

அப்துல் கலாம் மிகப்பெரிய சயின்டிஸ்ட்டாக இருந்த சமயம் இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தி முக்கியமான சயின்டிஸ்ட்ட அழைத்து முக்கியமான ஒரு மீட்டிங் போட்டுள்ளார். அதுல இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக ஏதாவது ஓன்று கண்டுபிடிக்கணும் அப்படின்னு சொல்லியுள்ளார். உடனே அதற்கான முயற்சியில் சயின்டிஸ்ட் எல்லாம் ஈடுபட்டாங்க. அந்த பணியை ஆரம்பித்த சில நாட்களிலேயே உங்களுடைய அப்பா இறந்துட்டாரு அப்படின்னு கலாமுக்கு தகவல் வருகின்றது.

அப்போது தன்னுடைய ஊருக்கு போயிட்டு இறுதி சடங்கை முடித்துவிட்டு மீண்டும் தன்னுடைய பணியை தொடர்கிறார் கலாம் . அடுத்த சில நாட்களில் அவருடைய அம்மாவும் இறந்து போன தகவல் வருகின்றது. அப்போதும் ஊருக்கு போயி எல்லா சடங்கை முடித்து விட்டு வேலையை தொடர்கின்றார்.

துன்பத்தின் மத்தியிலும் துவண்டு போகாத கலாம் உழைப்பு :

இந்த நிலையில் அவங்க கண்டுபிடிச்ச எஸ்.எல். வி காண சோதனை ஓட்டம் முடிஞ்சி அது தோல்வியில் முடிந்து.இன்னும் சில காலத்துக்குள் அதை வெற்றியடைய செய்ய வேண்டுமென்று தீவிரமாக விஞ்ஞானிகள் பணியை முன்னெடுத்தனர். அந்த சமயத்தில் அவருடைய படிப்பு செலவுக்காக தன்னுடைய கையில் போட்டிருந்த வளையளை கொடுத்த சகோதரி கணவர் இறந்ததாக செய்தி வருகின்றது.

அதற்கும் ஊருக்கு போயிட்டு அனைத்து சடங்கையும் முடிச்சிட்டு வந்து பணியை தொடர்ந்தார் கலாம்.அதன் பின்னர் SLV ப்ராஜெக்ட் வெற்றி பெற்று விண்ணை கிழித்து பறந்தது. ஒரு மனிதன் இந்த நாட்டை எப்படி நேசித்திருந்தால் பல துன்பத்தின் மத்தியிலும் துவண்டு போகாமல் தொடர்ந்து உழைத்து இருந்துள்ளார் என்பதை நாம் சிந்தித்து பார்க்கணும்.

ஜனாதிபதி மாளிகையில் இருந்து ஒரு தூசி கூட என்னோடு வரக் கூடாது :

தன்னுடைய குடியரசுத்தலைவர் பதவி காலம் முடிஞ்சு அப்துல் கலாம் ஜனாதிபதி மாளிகையில் இருந்து கிளம்பி வரும்போது எந்த ரெண்டு பெட்டி கொண்டு வந்தாரோ போகும் போது அந்த இரண்டு பெட்டியுடன் கிளம்பினாள். அப்போது செடிகளுக்கு தண்ணி ஊத்திட்டு இருந்த பணியாளரிடம் தன்னுடைய பெட்டி மேல தண்ணி ஊத்து என்று சொன்னாரு  ஐயா கலாம். அப்போது அந்த பணியாளர் இந்த பெட்டியில் முக்கியமான ரெக்கார்ட் இருக்குமே அது மேல எப்படி நான் தண்ணி ஊத்துறது அப்படின்னு பணியாளர் கேக்குறாரு.

உடனே அப்துல் கலாம் சொல்றாரு இந்த ஜனாதிபதி மாளிகையில் உள்ள  ஒரு தூசி கூட என்னோடு வரக்கூடாது. அதனால் இந்த பெட்டி மேல தண்ணி ஊத்து அப்படின்னு சொல்லியுள்ளார். இப்படிப்பட்ட நேர்மையான ஒரு மனிதன் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கின்றோம். அப்படிங்கிறது சொல்றதே நமக்குப் பெருமைதான். மிகச் சிறந்த மனிதன் அப்துல் கலாம் வாழ்வில் நடந்த சில சம்பவங்களை அவரின் பிறந்தநாளில் உங்களுடன் பகிர்ந்து கொண்டதில்  செய்தி சோலை சார்பில் பெருமை அடைகின்றோம் .

Categories

Tech |