அமெரிக்க அதிபர் ஜோபைடன் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகள் நடத்திக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் வட கொரிய நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் உச்ச கட்டத்தை அடைந்திருக்கிறது. வட கொரிய அரசு, நாங்கள் அணுசக்தி திறன்களை கொஞ்சம் நிறுத்தி வைக்கிறோம். அதற்கு பதில், எங்கள் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறது. இதனை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்நிலையில், இந்த வருடத் தொடக்கத்திலிருந்தே வடகொரியா கடும் நிதி நெருக்கடியிலும் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை செய்து கொண்டிருக்கிறது. எனவே, அமெரிக்க அரசு வடகொரியாவின் அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடையை விதித்துவிட்டது. எனினும் வடகொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை செய்திருக்கிறது.
இதோடு, ஒரு மாதத்தில் வடகொரியா 7-ஆம் முறையாக ஏவுகணை பரிசோதனை செய்திருக்கிறது. தற்போது மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை பரிசோதனை, கடந்த 2017-ஆம் பின் வடகொரிய நாட்டால் சோதிக்கப்படும் அதிக சக்தி வாய்ந்த ஏவுகணை என்று கூறப்பட்டிருக்கிறது.