வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை சிறிதும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வடகொரியா புதிய ஏவுகணை சோதனை ஒன்றை செய்து பார்த்துள்ளதாக தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் எந்த வகையான ஏவுகணை கிழக்கு கரை பகுதியிலிருந்து நடத்தப்பட்ட சோதனையில் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகமல் இருந்தது. இந்த நிலையில் அந்த ஏவுகணை வடகொரியா சமீபகாலமாக மேற்கொண்டு வரும் சோதனையின் “பலிஸ்டிக்” ஏவுகணையாக இருக்கலாம் என்று சில தரப்பினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே தென் கொரியா, ஜப்பானின் கடற்பரப்பில் வடகொரியா நீர்மூழ்கி கப்பல் மூலம் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல் கடந்த ஜனவரி மாதம் வடகொரியா “உலகின் மிக சக்திவாய்ந்த ஆயுதம்” என்றழைக்கப்பட்ட ஏவுகணை சோதனையை செய்துள்ளது.
அதோடு மட்டுமில்லாமல் பல ஏவுகணை சோதனைகளையும் வடகொரியா நடத்தியுள்ளது. அவை நீண்டதூர ஆயுதங்கள் மற்றும் ஹைபர்சோனிக் என்றும் அழைக்கப்பட்டது. இந்த நிலையில் ஏவுகணை ஒன்று வட கொரியாவில் உள்ள சின்போ துறைமுகத்திலிருந்து ஏவப்பட்டுள்ளது. பின்னர் அது ஜப்பான் கடல் என்றழைக்கப்படும் கிழக்கு கடலில் தரையிறங்கியுள்ளது. அது நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவப்பட்ட “பாலிஸ்டிக்” ஏவுகணையாக இருக்கலாம் என்று தென்கொரியாவின் கூட்டுப்படை தலைமை அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கிடையே பாலிஸ்டிக் ஏவுகணைகள் இரண்டு வீசப்பட்டிருப்பது மிக மோசமான செயல் என்று ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா கூறியுள்ளார்.