கடைக்கு சென்ற பெண் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருபுவனை அருகே ஆண்டியார்பாலத்தை சேர்ந்தவர் நித்யா. இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடைக்கு சென்று வருவதாக கூறி சென்றுள்ளார் நித்யா. வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் நித்யாவின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீடுகளில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் நித்யா கிடைக்கவில்லை. இதனால் திருபுவனை காவல்துறையினரிடம் மகளை கண்டுபிடித்து தருமாறு நித்யாவின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நித்யாவை விரைந்து தேடி வருகின்றனர்.