வேலைக்கு சென்று வருவதாக கூறிய பெண் மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள மண்மங்கலம் பகுதியைச் சார்ந்தவர் சண்முகம். இவருடைய மகள் சுவாதி. இவர் ஜவுளி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்று வருவதாக கூறி சென்ற சுவாதி இதுவரை வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த சுவாதியின் பெற்றோர் உறவினர் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் மகள் கிடைக்காததால் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுவாதியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.