Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மாயமான ஆசிரியை…. எங்கு தேடியும் கிடைக்கல…. காவல்நிலையத்தில் புலம்பும் தந்தை….!!

ஆசிரியை திடீரென்று மாயமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்திலுள்ள ஓச்சேரி பகுதியில் 28 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் வசித்து வந்தார். அவர் தர்மநீதி கிராமத்தில் இருக்கும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 24ஆம் தேதி அவர் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லை.

அவரது தந்தை அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காத காரணத்தினால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Categories

Tech |