Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காணாமல் போன வழக்கு… 10 மாதங்கள் பிறகு ஏற்பட்ட திருப்பம்… நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்…!!

ராமநாதபுரத்தில் வாலிபர் காணாமல் போன வழக்கில் 10 மாதங்களுக்கு பிறகு தற்போது திருப்பங்கள் ஏற்பட்டு கொலை வழக்காக மாறி 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள சின்னவன் பிள்ளை தெருவியில் மணிராஜா என்பவர் மகன் கணேஷ்ராஜா(19) வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் திடீரென மயமாகியுள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் ராமேஸ்வரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கணேஷ்ராஜாவை காணாமல்போன பட்டியலில் சேர்ந்து தேடி வந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து பல மாதங்கள் ஆகியும் எந்தவித தகவலும் கிடைக்காத நிலையில் கணேஷ்ராஜாவின் தாத்தா சுரேஷ் மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் சூப்பிரண்டு அதிகரியிடமும் பேரனை கண்டுபிடித்து தருமாறு மனு அளித்துள்ளார். இதனையடுத்து குற்றத்தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் நவநீதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அந்த விசாரணையில் கணேஷ்ராஜாவின் செல்போன் எண்னை வைத்து கடைசியாக யாரிடம் பேசினார் என கண்டுபிடித்து அவரது நண்பர்களான பாரதிநகரை சேர்ந்த மைக்கேல் அஜித்(25) ஸ்ரீராம் நகரை சேர்ந்த முத்துசேரன்(23), உச்சிப்புளி தோப்புவலசையை சேர்ந்த அஜித்குமார்(25) ஆகியோரை பிடித்து தனித்தனியாக விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் அஜித்குமார் மற்றும் முத்துசேரன் ஆகியோர் கஞ்சா வாங்குவதற்காக மல்லிகை நகருக்கு சென்றுள்ளனர். அப்போது கணேஷ்ராஜாவும் அவரது கூட்டாளிகளும் இணைந்து அஜித்குமார் மற்றும் முத்துசேரனை தாக்கியுள்ளனர். இதில் ஆத்திரமடைந்து அவர்கள் கணேஷ்ராஜை கொலை செய்யவேண்டும் என முடிவெடுத்துள்ளனர். அதன்படி கணேஷ்ராஜாவை ராமேஸ்வரம் செம்மடத்திற்கு வரவழைத்து கணேஷ்ராஜா, முத்துசேரன், அஜித்குமார், மைக்கேல் அஜித், சதீஷ் ஆகியோர் ஒன்றாக இணைந்து மது மற்றும் கஞ்சா அடித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து போதையான கணேஷ்ராஜாவை அவர்கள் 4 பேர் இணைந்து அரிவாளால் கழுத்தை அறுத்தும், கம்பியால் தாக்கியும் கொடூரமாக கொலை செய்துள்ளனர். மேலும் ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் கணேஷ்ராஜாவின் உடலை புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாததுபோல் நாடகமாடியுள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அவர்களை அழைத்துக்கொண்டு செம்மடக் பகுதிக்கு சென்று புதைத்த இடத்தை அடையாளம் கட்ட சொல்லி அந்த இடத்தை தோண்டியுள்ளனர்.

அப்போது மாவட்ட சூப்பிரண்டு அதிகாரி கார்த்திக், கூடுதல் சூப்பிரண்டு அதிகாரி லயோலா இக்னேசியஸ், தாசில்தார் அப்துல் ஜப்பார், வருவாய் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மருத்துவர்கள் முல்லைவேந்தன், துளசிபிருந்தா ஆகியோர் உடன் இருந்துள்ளனர். மேலும் கணேஷ்ராஜாவின் உடலின் எலும்புகூடுகளை எடுத்து ஆய்விற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து முத்துசேரன், மைக்கேல் அஜித், அஜித்குமார் ஆகியோரை கைது செய்த போலீசார் தப்பியோடிய சதீஷை தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |