Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி…. சிறுவனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை…. ஓடையில் தேடுதல் வேட்டை…!!

சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதால் காவல்துறையினர் ஓடையில் தேடும் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

குன்னூர் அருகே தூதூர்மட்டம் பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் ஒன்று உள்ளது. இதில் வட மாநில தொழிலாளர்கள் பலர் வேலை பார்த்து வந்துள்ளனர். இதில் லட்சுமணன் மற்றும் அவருடைய மனைவி சுமதி ஆகியோர் வேலை பார்த்து வந்துள்ளனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அதில் ப்ரீத்தி குமாரி என்ற சிறுமி சம்பவத்தன்று இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரை பதிவு செய்த காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் அடங்கிய குழுவினர் குழந்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள ஓடையில் தேடி வருகின்றனர். மேலும் அந்த சிறுவனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |