கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயிலில் இருந்து காணாமல் போன உலோக சிலைகள், தற்போது அமெரிக்காவில் கண்டறியப்பட்டிருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் வீரசோழபுரத்தில் அமைந்துள்ள மாரீஸ்வரன் என்னும் சிவன் கோயிலில் இருந்த ஆறு உலோக சிலைகள் கடந்த 1956 ஆம் வருடத்தில் காணாமல் போனது. அதனையடுத்து, காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க நாட்டில் இருக்கும் ஒரு அருங்காட்சியகத்தில் அந்த உலோக சிலைகள் பிரித்து வெவ்வேறான இடங்களில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில், 2 சிலைகள் 11-ஆம் நூற்றாண்டில் உள்ளது என்று கண்டறியப்பட்டிருக்கிறது.