Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுப்பு

சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் காணாமல் போன சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியருகேயுள்ள கிராமத்தில் 8 வயது சிறுமி நேற்று மாலை காணாமல் போனார். இதில் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் அவர் படிக்கும் பள்ளி உள்பட பல இடங்களில் தேடியுள்ளனர். எங்கு தேடியும் சிறுமி கிடைக்காததையடுத்து சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் சிறுமியைத் தேடி வந்த காவல்துறையினர், சிறுமியை சடலமாக அக்கிராமத்தின் அருகிலுள்ள காட்டுப்பகுதியில் கண்டெடுத்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவருடைய கொலைக்கு வேறு ஏதும் காரணமா? என்பது குறித்துக் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

மேலும், சிறுமியின் கொலைக்குக் காரணமானவர்களை விரைந்து கைது செய்யவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எட்டு வயது சிறுமி கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |