மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமான காவலரால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது
நாகர்கோவில் அருமனை பகுதியை சேர்ந்தவர் ஜினி குமார் இவருடைய மனைவியின் பெயர் ஜாக்குலின் ஷீபா இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஜினிக்குமார் சென்னையில் காவலராக வேலை செய்கிறார். இவர் ஊருக்கு வந்திருந்த சாமயம் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் ஜினிகுமார் திடீரென காணாமல் போய்விட்டார்.
இதனையடுத்து ஜினி குமார் காணாமல் போனதை பற்றி அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். இந்நிலையில் போலீசார் விசாரணை நடத்தியதில் ஜினிகுமார் விட்டு சென்றிருந்த 22 பக்க கடிதம் கிடைத்தது. அக்கடிதத்தில் மனைவி மற்றும் அவர் குடும்பத்தினரால் ஏற்பட்ட பிரச்சனைகளை எழுதியிருந்தார். இதை வைத்து போலீசார் விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.