காணாமல் போன தாய் மற்றும் மகனை தேடி வந்த போலீசாருக்கு அவர்களது வீட்டில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
பிரிட்டனை சேர்ந்த ஏழு வயது சிறுவனான டிமூர் மற்றும் அவனது தாய் யூலியா என்ற பெண்ணும் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் போலீசார் அவர்களை தேடி வந்தனர். இம்மாதம் 12ஆம் தேதி காணாமல் போன அவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் அவர்கள் வசித்து வந்த வீட்டிற்கு காவல்துறையினர் சென்று பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு காவல் துறையினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டினுள்ளே யூலியா தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருக்க 7 வயது சிறுவன் டிமூர் அவரின் அருகிலேயே உயிரிழந்து கிடந்துள்ளான்.
இதனைத் தொடர்ந்து இருவரது உடல்களும் பிரேத பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டு சிறுவன் தண்ணீரில் அழுத்தி கொல்லப்பட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து மகனை தண்ணீரில் அழுத்தி கொன்று விட்டு தாய் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் கருதி வருகின்றனர். எனவே இச்சம்பவம் தொடர்பாக யாரையும் காவல்துறையினர் தேடவில்லை.