மாயமான வாலிபரை மீட்க கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் பூ வியாபாரியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதீஷ் என்ற மகன் உள்ளார். கடந்த 5-ஆம்தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற ஜெகதீஷ் திரும்பி வரவில்லை. இதுகுறித்து முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெகதீஷை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் ஜெகதீசனின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் இணைந்து சிவகாமிபுரம் விலக்குப் பகுதியில் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெகதீஷை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டும் என உறுதி அளித்தனர். அதன் பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.