Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘மிஷன் ஆக்சிஜன்’ திட்டத்தில் …! 1 கோடி ரூபாய் நன்கொடை வழங்கிய -சச்சின் டெண்டுல்கர்…!!!

இந்தியாவின் கொரோனா  சிகிச்சைக்கு உதவும் வகையில் ,முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் நன்கொடை வழங்கினார்.

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று ,நாளுக்கு நாள் வேகமெடுத்து கொண்டிருக்கிறது. இதனால் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் ,ஆக்சிஜன்  தட்டுப்பாட்டால் உயிரிழந்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவிற்கு உதவி செய்யும் வகையில்,  வெளிநாடுகளிலிருந்து  ஆக்சிஜன் மற்றும் மருந்துகளை  இந்தியாவிற்கு வழங்கி வருகிறது . இதைத்தொடர்ந்து நடப்பு ஐபிஎல் சீசனின் கொல்கத்தா அணியில் இடம்பெற்றுள்ள, ஆஸ்திரேலிய வீரர்  கம்மின்ஸ், ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்  பிரெட்லீ  ஆகியோர் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வாங்குவதற்கு நிதியுதவி வழங்கி உள்ளனர் .

இதை தொடர்ந்து  ஐபிஎல் தொடரில் 8 அணிகளில் ஒன்றான ,ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இந்தியாவிற்கு கொரோனா சிகிச்சைக்காக நிதி உதவி அளித்துள்ளது . தற்போது ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி  நிர்வாகத்தின் சார்பில் ,ரூபாய் 1 ½ கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் கொரோனா தொற்றில் இருந்து மீண்ட. முன்னாள் இந்திய அணியின்  கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் , கொரோனா  நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வாங்குவதற்காக ரூபாய் 1  கோடியை ‘மிஷன் ஆக்சிஜன்’  என்ற திட்டத்தில்  நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Categories

Tech |