Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

“மிதுன ராசிக்கு”…..தடைகள் அகலும்….முன்னேற்றம் உண்டாகும்…!!!

மிதுன ராசி அன்பர்களே..!!! இன்று கனவுகள் நனவாகும் நாளாக இருக்கும். காரியத்தில் வெற்றி ஏற்படும் . தடைபட்ட ஒப்பந்தங்கள் தானாக நடைபெறுவது கண்டு  ஆச்சரியப்படுவீர்கள். மற்றவர்களின் விமர்சனங்களை மறந்து செயல்படுவது ரொம்ப நல்லது. தொழில் முன்னேற்றம் ஏற்படும். இன்று தொழில் வியாபாரத்தில் மெத்தனமான  போக்கு காணப்பட்டாலும்,தேவையான பண வரவு இருக்கும்.

புதிய முயற்சிகளில் தாமதமான  நிலை காணப்படும். உத்யோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையே காணப்படும். குடும்பத்தில் இருப்பவர்கள் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது ரொம்ப  நல்லது. மற்றவரிடம் கொஞ்சம் சாதரணமாக  பேசுங்கள். உங்களுடைய வாழ்க்கைத்துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் இன்று விலகிச் செல்லும்.

இன்று  மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க  கூடும். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,  அது உங்களுக்கு அதிர்ஷ்ட்டத்தை  கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று  சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் :  1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை

Categories

Tech |