மிதுன ராசி அன்பர்களே…!! இன்று வருமானம் உங்களுக்கு இருமடங்காக உயரும். அதாவது புதிய ஒப்பந்தங்கள் நல்லபடியாக வந்து சேரும். அரசியல்வாதிகளால் அனுகூலம் ஏற்படும். நண்பரிடம் இருந்த பகை மாறும். துணிந்து காரியங்களை செய்து மனமகிழ்ச்சி கொள்வீர்கள். காரிய வெற்றியும் பெறுவீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். அடுத்தவருடன் ஆலோசனை சொல்ல போய் பிரச்சனை வரக்கூடும், அதை மட்டும் நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்.
பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாமல் அன்பாக பேசுங்கள் நன்மையைக் கொடுக்கும். அக்கம்பக்கத்தினர் உடன் வீண் வாக்குவாதம் எதுவும் வேண்டாம். பொறுமையை கையாளுங்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களுக்கு ஓரளவு உதவிகரமாக இருப்பார்கள். இன்று கொடுக்கல்வாங்கல் விஷயங்கள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். நீங்கள் யாரிடமும் இன்று கடன்கள் மட்டும் வாங்க வேண்டாம். அதை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
அதாவது கல்வியில் ஆர்வம் அதிகமாகவே இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம தோஷங்கள் நீங்கி, அனைத்துவிதமான செல்வ செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.