மிதுன ராசி அன்பர்களே..!!! இன்று சிறு நிகழ்வு உங்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தெய்வ நம்பிக்கையுடன் செயல்படுவதால் பணி சீராக நிறைவேறும். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். பண பரிவர்த்தனையில் கவனம் இருக்கட்டும். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம். இன்று பணவரவு இருக்கும். எதிர்ப்புகள் விலகி செல்லும். தடைப்பட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள்.
மனதில் புதிய உற்சாகமும் தைரியமும் பிறக்கும். இன்று சொன்ன சொல்லை நிறைவேற்றி காட்டுவீர்கள். சமூகத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். கடன்கள் அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். பழைய பாக்கிகள் ஓரளவு வசூலாகும். நிதி மேலாண்மை ரொம்ப சிறப்பாகவே இன்று இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சின்னச்சின்ன பூசல்கள் இருக்கும். கூடுமானவரை வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். நண்பர்களிடம் பேசும் பொழுது வாக்குவாதங்கள் இல்லாமல் பேசுங்கள். அதுமட்டுமில்லாமல் இன்று யாருக்கும் எந்தவித பஞ்சாயத்துகளும் செய்ய வேண்டாம். அதில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.
திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண முயற்சி கை கூடுவதாக இன்று இருக்கும். இன்று மாணவக் கண்மணிகள் கொஞ்சம் கடினமாக உழையுங்கள். படித்த பாடத்தை தயவுசெய்து எழுதிப்பாருங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாகவே நடக்கும்.