மிதுனம் ராசி அன்பர்களே, இன்று அலுவலகப் பணிகள் துரிதமாக நடைபெறும், நாளாகவே இருக்கும். குடும்பத்தினர் உங்கள் தொழில் முயற்சிக்கு பக்கபலமாக இருக்கக்கூடும். ஆரோக்கியத்தில் அக்கறையாக இருங்கள். மாற்று இனத்தவர்களிடம் உதவிகள் கிடைக்கும். இன்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொழில் வியாபாரத்தில் முழு கவனத்தையும் செலுத்திவீர்கள்.
எதிர்பார்த்த பணம் கையில் வந்து சேரும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சிறப்பாக நடக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் தங்கள் பணியை இன்று எதையும் செய்து முடிப்பார்கள். பணி தொடர்பான பயணங்கள் இருக்கும். பயணம் ஓரளவு நன்மையே கொடுப்பதாகவே அமையும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
கல்வியில் இருந்த தடை விலகி செல்லும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், இளம்சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீலம்