மிதுனம் ராசி அன்பர்களே …!! இன்று வாழ்க்கையில் புதிய நம்பிக்கை உங்களுக்கு ஏற்படும்.மற்றவரையும் மதிப்புடன் நடத்துவீர்கள். தொழில் வளம் பெற இஷ்டதெய்வ அருள் துணை நிற்கும். ஆதாய பணவரவு எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். வழக்கு விவகாரத்தில் சாதகமான தீர்வு பெற அனுகூலம் உருவாகும். மேல்மட்ட அதிகாரிகள் உடன் வாக்குவாதங்கள் ஏதும் ஈடுபடாதீர்கள்.
இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மதிப்பு இருக்கும், இருந்தாலும் எச்சரிக்கையுடன் காரியங்களை எதிர்கொள்வது ரொம்ப நல்லது. அதிக முயற்சிகள் எடுத்த பின்தான் காரியங்கள் வெற்றியை கொடுக்கும். அதிக உழைக்க வேண்டியிருக்கும், உற்சாகமாகத்தான் காணப்படும். சக ஊழியருடன் கருத்து வேற்றுமை அவ்வப்போது வரலாம்.
எதிலும் கருத்து சொல்லும் முன் யோசித்து சொல்லுங்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம். இன்று எதையும் திட்டமிட்டு நீங்கள் செய்வீர்கள் இதனால் ஆதாயமும் பெறக்கூடும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினை இல்லாமல் சிறப்பாகவே இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு கூடும்.
மற்றவர் பிரச்சினை மட்டும் தயவு செய்து தலையிடாமல் இருந்தால் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் பச்சை நிறம்.