Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… பணவரவு இருக்கும்…வாக்குவாதத்தை தவிர்க்கவும்…!

 

மிதுனம் ராசி அன்பர்களே …!   இன்று மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் நீங்கும்.  எதிர்பார்த்தவை கிடைப்பதில்லை கொஞ்சம் தாமதம் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். உடன்பிறப்புகள் இடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்தியோகத்தில் ஓரளவு பெரிய சுமை குறையும்.இன்று தொழிலில்இருந்து வந்த தடைகள் விலகி செல்லும்.

தொழில் வியாபாரத்தில் மெத்தனப் போக்கு காணப்பட்டாலும் தேவையான பண வரவு இருக்கும். புதிய முயற்சிகள் தாமதமாக நிலையை காணப்பட்டாலும் பின்னர் சரியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களை தயவுசெய்து ஈடுபடவேண்டாம். இழுபறியான சூழ்நிலை இருந்தாலும் கொஞ்சம் பொறுமை காப்பது நல்லது.கணவன் மனைவிக்கு இடையே சற்று வாக்குவாதங்கள் வரலாம் பார்த்துக்கொள்ளுங்கள்.

மிக முக்கியமாக காதலர்கள் கொஞ்சம் கவனமாக பேசுங்கள் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது மட்டும் இல்லாமல்  இன்று வெள்ளிக்கிழமை என்பதால் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |