மிதுனம் ராசி அன்பர்களே …! இன்றைய நாள் உங்களுக்கு உற்சாகம் மிக்க நாளாக இருக்கும். உடன் பிறப்புகளால் உதவிகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் எளிதில் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும், பயணங்களால் செலவுகள் ஏற்படும். பயணங்களின்போது கவனம் இருக்கட்டும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள்.காரிய தடைகள் நீங்கும்.
இன்று எந்தவித முன்னேற்றத்திற்காகவும் நீங்கள் கடுமையாக உழைத்து செயலாக்கிக் காட்டுவீர்கள்.ஆனால் சில காரியங்களை செய்யும் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். நிலுவையில் உள்ள பணம் கையில் வந்து சேரும். பிறருக்கு நீங்கள் உதவிகளைச் செய்வீர்கள். இதனால் மற்றவர்கள் மனதில் எளிமையாக இடம் பிடிப்பீர்கள். உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதத்தில் இருக்கும்.
காதலில் வயப்படக்கூடிய சூழலும் இன்று அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.