Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…தந்திரமாக செயல்படுவீர்கள்…செயலில் தாமதம் ஏற்படலாம்…!

 

மிதுனம் ராசி அன்பர்களே …!  இன்று கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.

எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குழந்தைகளைப் பற்றிய கவலைகள் அவ்வப்போது வந்து செல்லும். தேவையான பொருள் உதவியும், பண வசதியும் அளவின்றி கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி பெற கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

காதலர்களுக்கு இன்று இனிய நாளாகவும், சிறப்பான நாளாகவும் அமையும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிவது சிறப்பு. இந்த நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுப்பதாக இருக்கும். அதுபோலவே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |