மிதுன ராசி அன்பர்களே …! இன்று சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை தயவுசெய்து பகிர்ந்துகொள்ள வேண்டாம். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் பணியாட்கள் டென்ஷன் கூடும். உங்களைப் பற்றிய வதந்திகள் வந்து சேரும். பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். இன்று கஷ்டங்கள் ஓரளவு குறையும்.
கடும் முயற்சிக்குப் பிறகு தான் நீங்கள் எடுக்கக் கூடிய காரியம் வெற்றியை கொடுக்கும். வாய் சம்பந்தமான நோய் உண்டாகலாம் கவனமாக இருங்கள். மனச் சிறையில் சந்திக்க நேரிடும். வாகனங்களில் செல்வதாக இருந்தால் ரொம்ப கவனமாக இருங்கள். காதலர்கள் இன்று எந்தவித வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். இன்று புதிதாக காதல் வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கும்.
கணவன்-மனைவிக்கு இடையே எந்த ஒரு விஷயத்தைப் பற்றி பேசும் பொழுதும் நிதானமாகப் பேசுங்கள். மனைவியின் ஆலோசனை கேட்டு முக்கிய பணியை செய்வது ரொம்ப நல்லது. குலதெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் உங்கள் காரியங்கள் ஓரளவு சிறப்பாகவே இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு தானமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று மிகவும் செல்வச் செழிப்புடன் வாழலாம்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.