Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…கவலையை ஏற்படும்…சிந்தனை மேலோங்கும்…!

மிதுன ராசி அன்பர்களே …!     இன்று குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்கு இடையே எந்த ஒரு விஷயத்தையும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொண்டால் மட்டுமே இன்றைய நாளை நீங்கள் மிக சிறப்பாக கொண்டாட முடியும். கூடுமான வரை சந்தோஷமாக இருப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

எல்லா காரியங்களும் அனுகூலமாக நடப்பதற்கு கடுமையான உழைப்பு இருக்கும். வாகனம் வாங்க கூடிய யோகம் இருப்பதால் கூடுமானவரை அதில் கவனம் செலுத்துங்கள். இப்போதைக்கு புதிய முயற்சிகளில் மட்டும் தயவு செய்து தள்ளிப்போடுங்கள் பெரிய முதலீடுகளை பயன்படுத்தி எந்தவித தொழிலும் இப்போதைக்கு செய்ய வேண்டாம். சுயதொழில் மேம்படுத்துவதற்கான சிந்தனை இருக்கும். இருந்தாலும் இன்று எதையும் செய்வதற்கு கொஞ்சம் தள்ளிப் போடுங்கள். தூரதேசத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

காதுக்கு இனிமையான தகவல்களும் இன்று வந்து சேரும். அது மட்டுமில்லாமல் உடல் ஆரோக்யத்தில் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள். சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் வரலாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |