Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…முயற்சி கைகூடும்…ஆர்வம் அதிகரிக்கும்…!

மிதுன ராசி அன்பர்களே …!     இன்று வருமானம் திருப்தி தரும் நாளாக இருக்கும். வாகனம் வீடு வாங்குவதில் ஆர்வம் இருக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான முயற்சியும் கைகூடும். பழைய கடன்களை கொடுத்து மகிழக் கூடிய வாய்ப்புகள் இருக்கும். பெண்களுக்கு சாமர்த்தியமான பேச்சு மூலம் காரிய வெற்றி காணப்படும். தேவையான நிதி உதவியும் கிடைக்கும். சின்ன விஷயத்தையும் பெரிதாக நினைத்து குழம்பிக் கொண்டிருப்பீர்கள்.

அதே நேரத்தில் பிரச்சினையை சமாளிக்கும் திறமையும் இருக்கும்.  வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும் மனம் மகிழ்ச்சி கொள்வீர்கள். காதலர்களுக்கும் சிறப்பான நாளாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். மற்றவர் பார்வையில் படும்படி எப்பொழுதுமே நீங்கள் பணத்தை எண்ண வேண்டாம். இன்று உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.

செயலில் தடைபட்டாலும் பின்னர் நல்லபடியாகவே நடந்தும். உள்ளமும் உற்சாகமாகவே காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை எப்பொழுதுமே உங்களுக்கு அதிஷ்டமானது. அது போலவே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் இளம்மஞ்சள் நிறம்.

Categories

Tech |