Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…புதிய வாய்ப்புகள் உண்டு…பொறுமை அவசியம்…!

மிதுன ராசி அன்பர்களே …!      நண்பர்களால் நல்ல காரியம் நடைபெறும். பணவரவு திருப்தியைக் கொடுக்கும். வீடு வாங்க முயற்சி கைகூடும். இன்று நீண்ட காலமாக தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். பிரிந்து சென்ற பிள்ளைகள் வந்துசேர்வார்கள். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய பதவியை அடைய கூடும். புதிய வேலைவாய்ப்புகளை பெற கூடும்.

ஒரு சிலர் அரசு பணியில் சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். இன்று எந்த ஒரு சூழ்நிலையில் அதற்கு ஏற்றார்போல் செல்படுவீர்கள். நிதானமாக காரியங்களை  மேற்கொள்ளுங்கள். பொறுமையை கண்டிப்பாக கடைபிடியுங்கள். இன்று காதலர்களுக்கு உன்னதமான நாளாக இருந்தாலும் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும்,சித்தர்கள்  வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |