Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…மகிழ்ச்சி பெருகும்…சிந்தித்து செயல்படுங்கள்…!

மிதுன ராசி அன்பர்களே …!    இன்று கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் உறவினர்கள் மதிப்பார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நேர்மறை எண்ணம் பிறக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதிய பாதை புலப்படும் நாளாக தான் இன்றைய நாள் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பிள்ளைகள் விரும்பும் பொருட்களை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியடையச் செய்விர்கள். வீடு வாகனம் போன்றவற்றை வாங்குவது விற்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். இன்று எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசனை செய்து செய்யுங்கள். உறவினர் வகையில் சிறு தொந்தரவுகள் இருக்கும்.  காதலர்களுக்கு இனிமை காணும் நாளாக இருக்கும்.

அனைத்து விஷயங்களிலும் நல்ல முன்னேற்றம் காணப்படும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்:  7 மற்றும் 8

அதிஷ்ட நிறம்: பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்.

Categories

Tech |