Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…செலவு அதிகரிக்கும்…திறமை வெளிப்படும்…!

மிதுன ராசி அன்பர்களே …!     இன்று அதிகம் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். குடும்பத்திலுள்ளவர்களாலும் மருத்துவ செலவுகள் ஏற்படும். முயற்சிகளில் தடைகளை சந்திப்பீர்கள். பொருளாதார நிலையிலும் சில சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டி தான் இருக்கும். எதையும் தள்ளிப் போடவேண்டாம். சிறு தவறுகூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஏற்கனவே செய்த திறமையான பணிகளுக்கு உரிய நல்ல பலனை பெறுவீர்கள்.

குடும்பத்தில் இருப்பவரிடம் தன்மையாக பேசிப் பழகுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் இருந்துக் கொண்டிருக்கும். குழப்பமில்லாத தெளிவான மனதுடன் எப்பொழுதும் இருங்கள். அனைத்து விஷயங்களும் சிறப்பை கொடுக்கும். முடிந்தால் இறை வழிபாட்டுடன் செய்யுங்கள் நல்லது நடக்கும். காதலர்களுக்கு இன்று ஓரளவு தான் இனிமை காணும் நாளாக இருக்கும். பேசும் பொழுது கண்டிப்பாக நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

முக்கியமான பணியை மேற்கோள்ள சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |