மிதுன ராசி அன்பர்களே …! இன்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சிகரமாக இருப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உங்களுக்கு கூடும். சொத்து வாங்குவது விற்பது போன்றவை உங்களுக்கு லாபகரமாக இருக்கும். சிந்தனை மேலோங்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை உங்களுக்கு சொல்லிக் கொடுப்பார்கள். எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் ஆற்றல் உருவாகும்.அலைச்சல் குறையும்.
அதேபோல முடியுமோ, முடியாதோ என்ற மனக்கவலை மட்டும் அவ்வப்போது வந்து செல்லும் எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். காரியத்தை சிறப்பாக செய்யுங்கள். எதிலும் வெற்றி பெறுவது இன்று கடினமாக தான் இருக்கும். ஆனால் கடின முயற்சிக்குப் பின்னர் காரியம் சிறப்பான வெற்றியை கொடுக்கும். தேவையில்லாத விஷயத்திற்காக மனக்குழப்பம் மட்டும் அடைய வேண்டாம். இன்று வீண் வாக்குவாதங்களை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து செல்லும்.
அதனால் எந்தவித பிரச்சினையும் இல்லை. உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் பாதுகாத்திடுங்கள் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ஒரு ரொம்ப நல்ல படியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை.