Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…நிதானமாக செயல்படுங்கள்…பிரச்சனை தவிர்க்கலாம்…!

மிதுன ராசி அன்பர்களே …!      

இன்று எங்கும் ஆனந்தம் பெருகும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களால் நன்மை கிட்டும். வெளியூர் பயணங்களின் பொழுது பொருட்களையும்  கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். உடல் ரீதியாக சில உபாதைகள் ஏற்படலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் சொல்வதை சாதாரணமாக எடுத்துக் கொள்வது நல்லது. பிரச்சினைகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் மன அமைதி கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனையிலும் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவது பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.  இன்று கூடுமானவரை செலவை கட்டுப்படுத்துவதற்கு மட்டும் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். காதலர்களுக்கு இன்று ஓரளவு தான் இனிமை காணும் நாளாக இருக்கும்.

கண்டிப்பாக பேச்சில் நிதானம் வேண்டும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு எப்போதும் அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்:  7 மற்றும் 8

அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |