Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…மன அமைதி குறையும்…திட்டமிட்டு செயல்பட வேண்டும்…!

மிதுன ராசி அன்பர்களே….!   வியாபாரத்தில் லாபம் எதிர்பார்த்த அளவு இருக்காது. கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். தேவையற்ற சிந்தனைகளால் மன அமைதி குறையும். படுத்தவுடன் தூக்கம் வராது என ஏமாற்றங்கள் கொஞ்சம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் குறையும். கொஞ்சம் திட்டமிட்டுதான் நீங்கள் காரியங்கள் செய்ய வேண்டியிருக்கும்.

உயர் இடத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது அவசியம். உழைப்பு இன்று அதிகமாக இருக்கும். காதலர்கள் பொறுமை காக்க வேண்டும். பேசும் போது கண்டிப்பாக நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். அதேபோல கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். எப்போதும் போலவே புதிதாக ஏதேனும் கடன்கள்  ஏதும் வாங்க வேண்டாம்.

வியாபாரம் தொடர்பான பயணங்கள் கொஞ்சம் அலைச்சல் கொடுப்பதாக இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும். சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். காரியங்கள் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெளிர் பச்சை நிறம்.

Categories

Tech |