Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…கடன் சுமை குறையும்…செயல் திறனும் அதிகரிக்கும்…!

மிதுன ராசி அன்பர்களே….!  இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். கடன் சுமை குறையும். அந்நிய தேச பயணம் செல்ல போட்ட திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல் வந்து சேரும். எல்லா நன்மைகளும் உங்களுக்கு உண்டாகும். முயற்சி வெற்றியை கொடுக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது மட்டும் நல்லது.

எல்லா காரியங்களும் அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கும். முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும். பணம் பன்மடங்கு பெருக்கும். வியாபாரத்திற்காக சில முக்கிய முடிவுகளையும் எடுக்கக்கூடும். உங்களுடைய செயல் திறனும் அதிகரிக்கும். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக அமையும். உடல் ஆரோக்கியம் சீராகி உள்ளம் மகிழ்ச்சியாகவே காணப்படும்.

முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஸ்டதை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டையும் , குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |