மிதுன ராசி அன்பர்களே….! இன்ற தொந்தரவுகளை எதிர்கொள்ள நேரிடும். முக்கிய பணிகளில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஆரவாரத்தை தவிர்க்க வேண்டும். பணம் வரவு குறைந்த அளவில் கிடைக்கும். வாகனத்தில் மிதவேகம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். எல்லாவற்றிலும் ஒரு பயம் வந்து கொண்டே இருக்கும். வீடு, வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் வேண்டும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனப் போக்கே காணப்படும்.
கூடுமானவரை இன்று கடன்கள் ஏதும் வாங்க வேண்டாம். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் ரொம்ப கவனமாக செயல்படுங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்தேன் என்று தேவையில்லாத பிரச்சினைகளில் சிக்கிக் கொள்ள வேண்டாம். பயணங்கள் செல்வதாக இருந்தால் ரொம்ப கவனமாக தான் செல்ல வேண்டும். வீண் அலைச்சலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதே போல உடல் ஆரோக்கியத்தில் ரொம்ப கவனம் கொள்ளுங்கள். புதிய நபர்களின் நட்பு உண்டாகும்.
தேவையில்லாத உணவுகளை உண்டுவிட்டு பிரச்சினையில் சிக்கிக் கொள்ள வேண்டாம். முக்கியமான பணியை என்று நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஊதா நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் ஆரஞ்சு நிறம்.