மிதுன ராசி அன்பர்களே….! இன்று பெரியவர்களின் அன்பும், ஆசியும் கிடைக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை முன்னேற்றம் பெறும். பணவரவும் நன்மையைக் கொடுக்கும். பெண்களுக்கு நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். எதிர்பார்த்த சுப செய்தி உங்களை தேடி வரக்கூடும். திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலமும் உண்டாகும். தெளிவான சிந்தனை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். கல்வி பற்றிய சிந்தனை இருந்துகொண்டிருக்கும்.
மனதில் உற்சாகம் பிறக்கும். உடல் ஆரோக்கியம் கூட ரொம்ப நல்லபடியாகவே இருக்கும். எந்த ஒரு தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆனால் தொழிலுக்காக நீங்கள் அலைய வேண்டியிருக்கும். சரியான நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள். அதேபோல் பேச்சில் எப்போதுமே நிதானத்தை கொஞ்சம் கடைபிடியுங்கள். கொடுக்கல் வாங்கலிலும் கவனமாக இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை.
மற்றவர் பார்வையில் படும்படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். முக்கியமா பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிஷ்ட எண்: 6 மற்றும் 8
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம்.