மிதுன ராசி அன்பர்களே …! தடைகளைத் தாண்டித்தான் முன்னேறிச் செல்ல வேண்டியிருக்கும். அனைவரிடமும் கனிவாக நடந்து கொள்ளுங்கள்.அமைதி மட்டுமே கோபத்திற்கு மருந்துகள் எனவே எதற்கும் வாய் திறக்காமல் இருப்பது ரொம்ப நல்லது. மனதில் குழப்பம் அவ்வப்போது வந்து செல்லும். உங்களிடம் ஆலோசனை கேட்டு சிலர் வர கூடும், அவர்களிடம் நீங்கள் எந்த விதத்திலும் வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபடவேண்டாம்.
எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனையே கொடுக்கும். சக ஊழியர்களின் கொஞ்சம் கவனமாகவே நடந்து கொள்ளுங்கள். எதிலும் கூடுதல் கவனம் இன்று வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டடாம். மனம் ஓரளவு அமைதியாக இருக்கும். தயவுசெய்து பஞ்சாயத்துகளில் ஏதும் தலையிட வேண்டாம். இன்று சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். புதிய முயற்சிகளை மட்டும் தயவு செய்து தள்ளிப்போடுங்கள்.
கணவன் மனைவிக்கு இடையே தேவையில்லாத வாக்குவாதங்கள் வரக்கூடும். காதலர்களும் அதேபோல பொறுமை காப்பது இன்று அவசியம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் வெள்ளை நிறம்.