Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…போட்டிகள் விலகிச்செல்லும்…புதிய வாய்ப்புகள் கிடைக்கும்…!

மிதுன ராசி அன்பர்களே….!   இன்று பூர்வபுண்ணிய நல்ல பலன் துணைநின்று உங்களுக்கு உதவி செய்யும். தொழில் வியாபாரம் வியத்தகு அளவில் வளர்ச்சியைக் கொடுக்கும். உபரி பண வருமானம் வந்து சேரும். வீட்டு உபயோக பொருட்களை வாங்குவீர்கள். மனைவி அன்பு பாசத்துடன் நடந்து கொள்வார். தொழிலில் முன்னேற தேவையான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகிச்செல்லும். தேவையான நிதி உதவிகள் கிடைக்க கூடும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை மேற்கொள்ளுவீர்கள். அலுவலக வேலைகளில் தாமதம் கொஞ்சம் இருக்கும். புது வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன்  இன்று கிடைக்கும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை ஏற்படும். வாழ்க்கை துணையுடன் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கூடுமானவரை பொருட்களின் மீது கவனமாக இருங்கள்.

அது மட்டுமில்லாமல் காதலர்கள் எப்போதும் போலவே பேச்சுவார்த்தையில் நிதானத்தைக் கடைப்பிடித்தால் முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |