Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…மன நிம்மதி உண்டு…பணிசுமை குறையும்…!

மிதுன ராசி அன்பர்களே….!    இன்று மனசஞ்சலங்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வழக்குகளில் வெற்றி செலவில் கூட அதிகரிக்கும். அரசு மூலமாக நடக்க வேண்டிய காரியங்கள் அலைச்சலுக்கு பிறகுதான் நடந்தேறும். புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணியில் தடையின்றி அனைத்து விஷயங்களும் நடக்கும். புதிய ஆர்டர் தொடர்பான காரியங்களில் சாதகமான பலனையே கொடுக்கும்.

வியாபாரப் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மன நிம்மதி அடைவார்கள். இருந்தாலும் மனதில் மட்டும் ஏதோ ஒரு கவலை இருந்துக்கொண்டே இருக்கும். அதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் காரியத்தை மட்டும் கண்ணும் கருத்துமாக செய்யுங்கள். அன்பு பரிபூரணமாக இருக்கும்.அதேபோல்

காதலர்களுக்கும் எந்த விதத்திலும் பிரச்சனை இல்லாமல் சுமுகமாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: நீலம் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |