Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…வளர்ச்சி அதிகரிக்கும்…அதிக உழைப்பு தேவை…!

மிதுன ராசி அன்பர்களே….!  இன்று தொடர்பு இல்லாத பணி ஒன்று சிரமத்தைக் கொடுக்கும். செயல்களில் முன்யோசனையுடன் ஈடுபடுவது நல்லது. தொழில் வியாபாரம் செழிக்க அதிக உழைப்பு தேவைப்படும். உறவினர் வகையில் கூடுதல் பணம் செலவு ஏற்படலாம். பெண்கள் தயவு செய்து நகைகளை இரவல் கொடுக்க வேண்டாம். சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழலில் இருக்கும். மிகவும் வேண்டியாவரை பிரிய வேண்டியிருக்கும்.

மற்றவர்களுக்கு வழியே சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும். ஆகையால் உதவிகள் செய்வதில் கவனம் கொள்ளுங்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைப்பதற்கான தகவல்கள் வரும். தொழில் செய்வோருக்கு வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும், தூரதேசத்திலிருந்து நல்ல தகவல் இருக்கும். ஏற்றுமதி துறையில் உள்ளவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உறவினருடன் அன்பாக நடந்து கொண்வீர்கள்.

செலவை மட்டும் கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். காதலர்களுக்கு எந்த விதத்திலும் பிரச்சனை இல்லாமல் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் என்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நடையாகவே நடந்து முடியும் என்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடமேற்கு அதிர்ஷ்ட எண் 2 மற்றும் 5 அதிர்ஷ்ட நிறம் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |