மிதுன ராசி அன்பர்களே….! நல்ல செயலுக்கு உரிய நல்ல பலன்கள் இன்று தேடி வரும். அவமதித்தவர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபாரத்தில் புதிய சாதனை ஏற்படும். பண பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்ப கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மந்தமான சூழல் காணப்படும்.
பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். மேல் இடத்தை அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. வீண் அலைச்சலும், வேலைப்பளுவும் அவ்வப்போது இருக்கலாம். பேச்சில் எப்போதும் போலவே நிதானத்தை மட்டும் கடைபிடிக்க வேண்டும். காதலர்கள் கண்டிப்பாக இன்று பொறுமை காக்க வேண்டும். பேச்சில் நிதானத்தை செலுத்த வேண்டும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் முருக பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண்கள்: 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.