Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…மனக்குழப்பம் நீங்கும்…தெளிவு பிறக்கும்…!

 

மிதுன ராசி அன்பர்களே …!   பெண்களால் பெரிய செலவுகள் ஏற்படும். நான்கு சுவற்றுக்குள் இருக்கவேண்டிய குடும்ப விவகாரங்களை பொது இடத்தில் தயவு செய்து பேச வேண்டாம். புதிய பொருட்களை அவசியப்பட்டால் மட்டுமே தயவுசெய்து வாங்குகள். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்ளுங்கள். உடல் களைப்பும்,சோர்வும் கொஞ்சம் உண்டாகும் கவனமாக இருங்கள்.

பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் பொழுது யோசித்து செயல்படுவது நல்லது.  செலவு அதிகரிப்பதால் பொறுமையாக இருக்க வேண்டும். இன்று எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். கவனமாக இருந்தால் காரிய வெற்றியும் முன்னேற்றத்திற்கு உதவும். இன்று நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களில் தெளிவான சூழல் இருக்கும்.மனக்குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

காதலர்களுக்கு இடையே உன்னதமான நாளாக  அமையும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறமும் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரிய பகவான் வழிபாடு மேற்கொண்டால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்குத் திசை

அதிஷ்ட எண்கள் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் பச்சை நிறம்.

Categories

Tech |