Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… மனசஞ்சலம் உண்டாகலாம்…அலட்சியம் வேண்டாம் …!

மிதுன ராசி அன்பர்களே …!    இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு ஓரளவு சுமாராக இருக்கும். மனசஞ்சலங்கள் அவ்வப்போது வந்து செல்லும். சிலருக்கு வழக்குகளால்  செலவுகள் ஏற்படும். பணவரவு தாமதப்பட்டாலும் இன்று வந்து சேரும் கவலை வேண்டாம். பெரியோரிடம் பகைமை பாராட்டுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்பட்டு தான் வந்து சேரும்.பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் மெத்தனம் காணப்படும்.

எந்த ஒரு காரியத்தையும் இன்று அலட்சியம் காட்டாமல் செய்யுங்கள். தொடர்ந்து வேலையை நல்லபடியாக செய்யுங்கள். அப்போதுதான் சிறப்பை கொடுக்கும். இன்று உழைப்பு அதிகமாக இருப்பதால் உள்ளம் சோர்வாகவே காணப்படும். உடலும் சோர்வாகவே காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே எதையும் பேசி தீர்த்துக் கொள்ளுங்கள் தேவையில்லாத வாக்குவாதத்தில் மட்டும் ஈடுபட வேண்டாம். காதலர்கள் என்று பொறுமை காப்பது ரொம்ப முக்கியம்.

வேலை இல்லாத நண்பர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள்.உங்களுக்கான தகுந்த வேலை கிடைக்கும் வரை நாம கொஞ்சம் காத்திருப்போம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் உங்களுக்கு சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் பச்சை.

Categories

Tech |