Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…மனத்துயரம் நீங்கும்…சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும்…!

மிதுன ராசி அன்பர்களே….!  இன்று உங்களுடைய மனதில் உற்சாகம் நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிரமம் குறையும். ஆதாய பணவரவு கிடைக்கும். உறவினரின் விருந்துகளில் கலந்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கும். இன்று மற்றவர்களுக்கு உதவிகளை செய்வீர்கள். ஆனால் தேவையில்லாத வீண் சர்ச்சைகள் மட்டும் சிக்கிக்கொள்ள வேண்டாம் கவனமாக நடந்து கொள்ளுங்கள்.

வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கையாக செல்வது நல்லது. இன்று மனத்துயரம் நீங்கும். சிற்றின்ப செலவுகள் அதிகரிக்கும். மனதில் ஏதாவது கலக்கம் இருந்து கொண்டே இருக்கும். காரணம் இல்லாமல் வீண் பழி சுமக்க நேரிடும். எதிலும் கவனம் இருந்தால் அனைத்து விஷயங்களிலும் இன்று முன்னேற்றம் ஏற்படும். இன்று காதலர்களுக்கு ஓரளவு சிறப்பான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும்.

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை எந்தவிதப் பிரச்சினையுமில்லாமல் சுமுகமாகவே இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கரும்பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. கரும்பச்சை உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: கரும்பச்சை மற்றும் நீலம்.

Categories

Tech |