Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… நன்மை உண்டாகும்…சோர்வு ஏற்படும்…!

மிதுன ராசி அன்பர்களே …!    இன்று திட்டமிட்டு செல்களை நிறைவேற்றுவதன் மூலம் அதிக நன்மை பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் நீங்கள் நினைத்த இலக்கை எளிதில் அடைவீர்கள். உபரி பணவரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வீண் வாக்குவாதங்களால் பகையை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. வேலை தொடர்பாக அலைச்சல் இருக்கும். உடல் சோர்வு கொஞ்சம் இருக்கும்.

வரவேண்டிய பாக்கிகள் தாமதமாகத்தான் வந்து சேரும். புதியதாக கடன்கள் மட்டும் இன்று வாங்க வேண்டாம். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய முழுதும் கொஞ்சம் கவனமாக இருங்கள். உங்களுடைய வசீகரப் பேச்சால் அனைத்து விஷயங்களும் இன்று சாமர்த்தியமாக முடிப்பீர்கள். காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தை நடத்தினால் திருமணத்தில் முடிய கூடிய வாய்ப்புகளும் உண்டு.

கணவன் மனைவிக்கு இடையே அன்பு நீடிக்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள் கோபம் வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 2

அதிர்ஷ்ட நிறம்: இளம் பச்சை மற்றும் நீல நிறம்.

Categories

Tech |