மிதுன ராசி அன்பர்களே….! இன்று வரவுக்கு மிஞ்சிய செலவு அதிகமாக இருக்கும். பெண்களால் பெரிய செலவுகள் ஏற்படும். நான்கு சுவற்றுக்குள் இருக்கவேண்டிய குடும்ப விவகாரங்களை தயவுசெய்து பொது இடத்தில் பேச வேண்டாம். கண்டிப்பாக இன்று உங்களுடைய ரகசியங்களை பாதுகாக்க வேண்டும். புதிய பொருட்களை யோசித்து அவசியப்பட்டால் மட்டுமே வாங்குங்கள். உங்களுக்கு மிகவும் வேண்டியவர் உங்களை விட்டு விலகிச் செல்லலாம்.
மாற்று மதத்தினரின் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த பணவரவு இருக்கும். போட்டிகள் குறையும். புதிய நண்பர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் உண்டாகும். கூடுமானவரை கவனமாக இருங்கள் எதிலும் எதிர்பாராத தடைகள் உண்டாகலாம். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காணும் நாளாக இருக்கும். அதே போல மன தைரியமும் இன்று ஏற்படும். கூடுமானவரை அக்கம்பக்கம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். மாலை நேரங்களில் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அது மட்டுமில்லாமல் இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்ல படியாகவே நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.