மிதுனம் ராசி அன்பர்களே …! இன்று கடின வேலைகளை கூட எளிதில் முடிக்கும் நாளாக இருக்கும். சமுதாய பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். சகோதர வழி ஒத்துழைப்பு கிடைக்கும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். நிலையான வருமானத்திற்கு வழி கிடைக்கும். புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். ஒதுக்கி வைத்த பணியை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து சிரமங்கள் நீங்கிச் செல்லும். பிள்ளைகள் விரும்பி பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.
இன்று குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மையை கொடுக்கும். பண வரவு நல்ல படியாக இருக்கும். ஆனால் வீண் செலவுகள் தான் ஏற்படும். தேவையில்லாத பொருள்களில் எந்தவித முதலீடுகளையும் வேண்டாம். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் இருக்கட்டும். பயணங்களின் போது வாகனத்தில் செல்லும் பொழுதும் எழும்ப எச்சரிக்கையாக தான் இருக்க வேண்டும்.
வெளி நபரிடம் தேவையில்லாமல் உரையாட வேண்டிக் கொண்டிருக்க வேண்டாம். இன்று முக்கியமானபணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை இல்லத்தில் நடத்துவதால் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்