மிதுன ராசி அன்பர்களே…!! இன்று கடந்தகால நல்ல செயலுக்கு உரிய பலன்கள் கிடைக்கும். அவமதித்தவர்கள் அன்பு பாராட்டுவார்கள். தொழில் வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை ஏற்படும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். வீட்டு உபயோக பொருட்களை வாங்க கூடும். இன்று கலைத்துறையினருக்கு சிறப்பான நாளாக இருக்கும்.
தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்துமே திரும்ப கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு மந்தமான சூழல்தான் இருக்கும்.பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். மேல் இடத்தை அனுசரித்து செல்வது நல்லது. இன்று வீண் அலைச்சலும், வேலைப்பளுவும் ஏற்படக்கூடும். இன்று மாணவர்கள் விளையாட்டை ஏறக்கட்டி விட்டு, பாடத்தில் கவனத்தை செலுத்துவது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிஷ்ட எண் : 4 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் ஆரஞ்சு நிறம்