Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…”வார்த்தைக்கு மதிப்புக் கூடும்”….. வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமை…..!!!

மிதுன ராசி அன்பர்களே…!! இன்று முக்கிய புள்ளிகள் சந்திப்பால் முன்னேற்றம் கூடும். உங்களுடைய நிதி நிலை உயரும். விலை உயரும் பொருள்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வருங்கால நலன்கருதி எடுத்த புதிய முயற்சி வெற்றியை கொடுக்கும். இன்று உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் நன்மை ஏற்படும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். இன்று நீங்கள் நினைத்தது நிறைவேறும் நாளாகவே இருக்கும். ஆனால் வாகனத்தில் செல்லும் பொழுது மட்டும் கொஞ்சம் பொறுமையாக செல்லுங்கள். இன்று மாணவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்க கூடிய சூழல் இருக்கு. கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், சூரியபகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்யுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்

Categories

Tech |