மிதுன ராசி அன்பர்களே…!! இன்று இன்பங்கள் வந்து சேர தெய்வீக நம்பிக்கை மேற்கொள்வது நல்லது. எதிர்பார்த்தபடியே வருமானம் வந்து சேரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். வீடு கட்டும் முயற்சியை மேற்கொள்வீர்கள். வாகன யோகம் உண்டாகும். இன்று அவசர முடிவுகளை எடுப்பதை மட்டும் தவிர்ப்பது நல்லது. விரும்பத்தகாத ஆசைகள் இன்று ஏற்படலாம், கவனமாக இருங்கள். உடலில் வசீகரத் தன்மை கூடும்.
காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கும். வீடு, மனை, நிலம், வாகனம் போன்ற சொத்துக்களிள் எடுக்கக்கூடிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். இன்று தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படக்கூடும். கணவன் மனைவியைப் பொறுத்தவரை அன்பு இருக்கும். குடும்பத்தில் கலகலப்பும் மகிழ்ச்சியும் இருக்கும். இன்று மாணவர்களுக்கு மட்டும் கல்வியில் கொஞ்சம் தடை இருக்கும். கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாகவும் நிதானமாகவும் பாடங்களைப் படியுங்கள்.
ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்து கவனியுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெளிர் பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெளிர் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை மற்றும் ஆரஞ்சு நிறம்