Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு ”காணாமல் தேடிய பொருள் கிடைக்கும்” புதிய பதவி கிடைக்கும் …!!

மிதுன இராசி அன்பர்களே…!! இன்று பதவியில் உள்ளவர்களின் உதவிகள் கிடைக்கும் நாளாக இருக்கும். வருமானம் நல்லபடியாகவே உயரும். பயணங்களால் பலன் கிடைக்கும். பக்கபலமாக இருந்த நண்பர்கள் காரியங்களை முடித்துக் கொடுப்பார்கள். பொது வாழ்வில் புகழ் கூடும். இடையூறு விலகி நன்மை ஏற்படும். பொதுப் பணியில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வளர்ச்சி ஏற்படும். ஆதாய பணவரவு கிடைக்கும். காணாமல் தேடிய பொருள் கையில் வந்து சேரும். இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப் பிடிப்பார்கள். வியாபாரப் போட்டிகள் குறையும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்து சேரும். வருமானம் கூடும். இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது ஆரஞ்சு நிறத்தில் ஆடையோ அல்லது கை குட்டை வைத்துக்கொள்வது சிறப்பாகும். உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுப்பதாக இருக்கும். வெற்றியையும் கொடுக்கும். அதே போல இன்று நீங்கள் காலை எழுந்ததும் விஷ்ணு பகவானை மனதார நினைத்து வழிபட்டு தொடங்கினால் அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்டமான  எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்டமான  நிறம் : ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |