Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு ”காதல் கைகூடும்” எல்லா கஷ்டங்களும் நீங்கும் ….!!

மிதுனம் ராசி அன்பர்களே….!! இன்று நீங்கள் கேட்ட இடத்தின் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். வருங்கால நலன் கருதி எடுக்கக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை  கொடுக்கும். தொழில் வளர்ச்சிக்கு தடையாய்  இருந்தவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். உடன்பிறப்புகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது நல்லது. அலைபேசி வழித் தகவல்   ஆனந்தத்தை கொடுக்கும். இன்று உங்களுக்கு காதல் கைகூடும். இன்று எல்லா கஷ்டங்களும் உங்களுக்கு நீங்கும். பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். பண வரவு சிறப்பாக இருக்கும்.

வேலைப்பளு காரணமாக நேரம் தவறி கொஞ்சம் உணவு உண்ண வேண்டியிருக்கும் , அதை மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். அதே போல உஷ்டம் தொடர்பாக வயிறு கோளாறு கொஞ்சம் ஏற்படும் , அதையும் பார்த்துக் கொள்ளுங்கள். திருமணம் முயற்சிகள் கைகூடும். வாழ்க்கை துணையால் உங்களுக்கு பண வரவு இருக்கும். இன்று மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.அதே வேலையில் விளையாடும் போது மட்டும் கொஞ்சம் கவனமாக விளையாடுங்கள். இன்று நீங்கள் சிவன் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்து காரியங்களையும் சிறப்பாக செய்யலாம். நீங்கள் நினைத்தத அனைத்து விஷயங்களும் சிறப்பாக நடக்கும். இன்று காலையில் எழுந்தவுடன் சிவன் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : மேற்கு

அதிர்ஷ்டமான  எண் : 5 மற்றும் 9

அதிர்ஷ்டமான  நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |